Wednesday, 5 March 2014

இணைய வேகத்தை கூட்ட

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!
நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Windows XP யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்:

1.Strar button கிளிக் செய்யுங்கள்.
2. Run கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. கிளிக் ஓ.கே.
5. அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrativeTemplates தேர்ந்தெடுங்கள்.
6. தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள்.
7. இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள்.

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்..

விண்டோஸ் 7 - ல் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி:

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்களா? அப்படி எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் இணையவேகம் அதிகரிக்கும்.

Windows 7-ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்
1. ரன் விண்டோவை திறக்கச் செய்யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்டலாம். அல்லது Start+R கொடுத்து ரன் விண்டோவைத் திறக்கலாம்.)
2.திறக்கும் run window-வில் system.ini என தட்டச்சிடுங்கள்.
3. புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல்வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம்.
4. திறந்த கோப்பில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து கோப்பில் உள்ள நிரல்வரிகளுக்கு கீழே பேஸ்ட் செய்துவிடுங்கள்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

பேஸ்ட் செய்தவுடன் Ctrl+S அழுத்தி மாற்றத்தை சேமித்துவிடுங்கள். அல்லது file==>save கிளிக் செய்யவும். மாற்றம் செய்ததை சேமித்தவுடன் கோப்பை மூடிவிடவும்.
தற்போது Windows xp பயனர்களுக்கு சொன்னதுபோலவே உங்கள் கணினியை Restart செய்யுங்கள். பிரௌசரை திறந்து இணையத்தின் வேகத்தை சோதனை செய்யுங்கள். மாற்றம் தெரிகிறதா?

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

இணைய பாவனையாலர்கலான நாம் இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Tuesday, 4 March 2014

நமது மொபைல் தொலைந்து விட்டால் ??????????

நமது மொபைல் தொலைந்து விட்டால் ??????????


  • நமது போன்  தொலைந்து விட்டால் நாம் முத்தலில் என்ன செய்ய வேண்டும் ?
பொதுவாக நமது ஆண்ட்ராயிட் மொபைலின் மெனுவில் GOOGLE SETTING என்ற ICON 
இருப்பதை பார்த்திருப்போம் இது GOOGLE இன் மூலமாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது நமது மொபைலில் உள்ள அனைத்து APPLICATION களும் நமது மொபைல் இருக்கும் வரைதான் உபயோகப்படும் ஆனால் இந்த GOOGLE SETTING மொபைல் தொலைந்த பின்னர்தான் நமக்கு உபயோகப்படும் 

  • பொதுவாக நாம் அனைவரும் நமது போனில் ANTI THEFT ஐ SET செய்து வைத்திருப்பதில்லை 
  • என்னை  பொறுத்தவரை அது தேவையும் இல்லை ஏனென்றால் அது அனைத்தும் நாம் நினைத்த விதம் வேலை செய்வதில்லை  
இதில் உள்ளே சென்றதும் ANDRIOD DEVICE MANAGER என்பதனை


 TAP கொடுத்து REMOTELY LOCK THIS DEVICE மற்றும்ALLOW REMOTE LOCK AND FACTORY RESETஎன்பதனை ENABLE செய்துவிட்டால் போதுமானது பெரிய வேலை ஒன்றும் இல்லை 
பிறகு நமது போனை எடுத்து உபயோகிப்பவனை பலிவாங்கி விடலாம் 
அதை செட் செய்து விட்டு கீழ்க்கண்ட வழிமுறைகளில் முயற்சித்து பாருங்கள் முதலில் உங்களது போனிலோ கணினியிலோ BROWSERஇல் இந்த LINK ல் சென்று உங்களது GMAIL LOGIN செய்து உங்கள்   போனை இங்கிருந்தே  செயல் படுத்தலாம் முயற்சித்து பாருங்கள் 
இதை செயல் படுத்த உங்களது போனில் INTERNET இணைப்பு இருப்பது அவசியம்

மொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா ?

மொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா ?


இதுதான் LG அறிமுகம் செய்துள்ள புதிய நெகிழும் தன்மை கொண்ட DISPLAY 

மனிதர்களாகிய நாம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த 5 வருடத்தில் அபார வளர்ச்சியை அடைந்துள்ளோம்  சில வருடங்களுக்கு முன்னாள் பேப்பரில் TOUCH SCREEN
 கொண்ட மொபைல் வந்திருக்கிறது என்ற செய்தியை ஆர்வத்துடன் படித்திருப்போம் அதெல்லாம் நாம் எப்பொழுது உபயோகிக்க  போகிறோமோ என்ற ஏக்கம் நம் 
அனைவருக்கும் இருந்திருக்கும் எனக்கும் இருந்தது ஆனால் இன்று   ANDROID OS ஐ கேடயமாக சுமந்து நம் அனைவரது   கைகளிலும் சாதாரணமாக இருக்கிறது அது  சலித்தும் போய்விட்டது யாருடைய கைகளிலும் மொபைல்  இல்லாமல் இல்லை இதை கணித்த MOBILE தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிபோட்டு தங்களுடைய திறமைகளை காண்பிக்க தொடங்கிவிட்டன அந்த வரிசையில் LG நிறுவனம் அறிமுகம் செய்ததுதான் இந்த FLEXIBE DISPLY 
 நாம் இதனை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்ள முடியும் கீழே போட்டாலும் உடைந்து சிதறாது மாறாக விழுந்த தரையோடு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது இதனுடைய  நிறுவனம் இதை வேகமாக விற்ப்பனைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது
 என்பதால்  நம் கைகளில் வேகமாக இது கிடைக்க  பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆகவே தாங்கள் இதனை உபயோகிக்க தயாராகிக்கொல்லுங்கள் 

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்




மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . 
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள் 

Computerன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ் !!!

Computerன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ் !!!


கம்ப்யூட்டர் சிப்ஸ் !!!
***************************************

என்னடா,,,,,,,, இது,,,,,, சிப்ஸ்சா ?

ஆமா ! எத்தன தடவதான் டிப்ஸ்,,,டிப்ஸ் னு
படிக்குறது !கொஞ்சம் ஜாலிக்கு சிப்ஸ்னு
வச்சுகுவோம்!!!

அடிங்,,,,,,மேட்டர் என்ன அத சொல்லு ?

பாஸ் ! உங்க கம்ப்யூட்டர் on பண்ண starting ரொம்ப நேரம் ஆகுதுனு சொன்னிங்களல ! ஆமா ,,,,,!
அதுக்கு ஒரு பெரிய ஐடியா இருக்கு ,,,,!!!!

என்ன ஐடியா சொல்லி தொலையும் !!!

ok பாஸ் ! நம்ம கம்ப்யூட்டர் புதுச இருந்தா on பண்ணும் பொது அப்டி 2 secல ,,, open ஆகிறும் !! அதுவே 6 மாசம் அல்லது 1 வருஷம் ஆச்சுனா !! ரொம்ப நேரம் ஆகும் !

ஆமா!! டா எனக்குலாம் !!! 15நிமிஷம் ! 20 நிமிஷம் !
ஆகுது ?

இதுக்கு காரணம் ! நம்ம கம்ப்யூட்டர் on பண்ணும் பொது அதிகமான softwareகளை update செய்து இயக்குவதால் !
நம்ம கம்ப்யூட்டர் open ஆவதற்கு அதிக நேரம் எடுக்குது! தேவையில்லாத software update ஆவதை தடுத்துவிட்டால் ! அப்டி 2 sec open ஆகிறும் !!!!!!!!

எப்டிடி,,,,,,,,,,,,,,,,,தடுப்ப ,,,,,,,,,,,,,,,,,,,?

பாஸ்! நம்ம கம்ப்யூட்டர் windows 7ல windowskey + R press பண்ணுங்க ,சின்ன run box வரும் அதுல "msconfig." type பண்ணுங்க ! ((கிழே உள்ள படத்துல மாதிரி ஒரு box வரும் !)) அதுல Startup tab select பண்ணுங்க தேவையில்லாத software எல்லாத்தையும் turnoff பண்ணுக ! அவ்ளவுதான்
மேட்டர் over ! உங்க system restart கேக்கும் ok குடுங்க அப்புறம் பாருங்க உங்க systemதா அப்டி ஜூப்பர open ஆகும்!!!

டேய்! என்னோடது விண்டோஸ் 8 ட ?

பாஸ் ! windows 8 ல toolbar right clik பன்ன Task Manager
வரும் ! அதுல போய் நீங்க தேவையில்லாத software turnoff பண்ணலாம் பாஸ்!!!

ரொம்ம நன்றிட !!!

பாஸ்!!! இத நீங்க படிச்சா மட்டும் பத்தாது உங்க
frd's எல்லாருக்கும் share பண்ணனும் !!

**********************************************
இவன் : ((((((((((((அ முகமது நஸ்ருதின் ))))))))))))))))))

**********************************************

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை !

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன


சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்
Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்


இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல்
Total அதே 41.26Mb
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்




  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 



இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb 
அதின் உபயோக அளவு 432மMb 
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று

  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 

  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 


இதில் எதாவது சந்தேகம் இருப்பின் FACEBOOK COMMENT பதிவிடலாம்

PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDS

ஆன்றாயிட் மொபைலை Root செய்வது எப்படி? அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள்



ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது 
அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது.

ஆண்ட்ராயிட் மொபைலை  உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்க்கான   APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும் பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால் அதை செய்வதினால் நன்மைகள் மற்றும் கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில் இருக்கின்றது என்பதை தெழிவு படுத்ததான் இந்த பதிப்பு இதை  எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன் உங்களின் பயனுக்காக

ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்

                     இதை தெறிந்துகொள்வதற்க்கு முன்பு ROOT என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக ANDROID SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதனால் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ இயலாது  ஆனால் ROOT செய்வதனால் SYSTEM FILEஐ முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன் கொண்டுவர முடியும்
இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும் EXAMBLE சிலரது மொபைல்கலில் தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை அவர்கள் இதனை செய்வதனால் எளிமையாக உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்
(FONT INSTALL செய்வதையெல்லாம் பின் வரும் பதிப்புகளில் பார்க்கலாம்)

ROOT செய்வது எப்படி

MOBILEஐ ROOT செய்வதற்க்கு உங்களிடம் கனினி இருப்பது அவசியம். பின்பு உங்களது மொபைலின் DATA CABLEலும்

1.முதலில் உங்களது கனினியில் இந்த KINGO ANDROID ROOTஐ  
  செய்துகொள்ளுங்கள்

2.உங்களுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS > USB DEBUGGINGஐ ENABLE செய்துகொள்ளுங்கள்

3. உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ கனினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )

4. இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து

5. கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும் அவ்வளவுதான் இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT செய்யப்பட்டிருப்பதற்க்கான அடையாளம்


  •  தீமைகள்
                           ROOT செய்வதினால் SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிடும் என்பதால்PROGRAMING ERASER அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்

ROOTசெய்யப்பட்ட  MOBILEகளுக்கு அதனுடைய நிறுவனததாரிடமிருந்து WARRENTY உங்களுக்கு கிடைக்கப்பெற மாட்டாது     அதனால் WARRENTY காலம் முடியும் தறுவாயில் இதனை செய்வது நல்லது

இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே இதற்கான முடுக்கு ஆனால் இதனை செய்வதினால் பல நன்மைகள் இருக்கிறது அது என்ன என்பதை பின் வரும் பதிப்புகளில் காணலாம்

இனைந்திருங்கள் இது உங்கள்  ஆண்ட்ராயிட் applicTIONS

கனினி மற்றும் மொபைல் தொடர்பான கேல்விகளுக்கு

Essential Personal Phone Skills


தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள் - Essential Personal Phone Skills
Posted on 2014/03/04 at 8:05 AM By powerthazan thazan 0 Comments 0 FB comments
இப்பதிவில் நீங்கள் ஒரு அழைப்பை எடுக்கும் போது அல்லது இன்னொருவர் உங்களுக்கு அழைக்கும் போது எப்படி அந்த அழைப்பை கையாள வேண்டும் ? எப்படி பதில் அளிக்க வேண்டும்? என சில அறிவுரைகளை காணுங்கள். ஏற்கனவே,
நீங்கள் பல ஆயிரக்கணக்கான அழைப்புகளை கையாண்டு இருப்பீர்கள், எடுத்தும் இருப்பீர்கள். இதெல்லாம் நமக்கு தேவையா? என கேட்கலாம். அவசியம் என்று இல்லை. ஆனால் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

இப்பதிவு தனிநபர் தொலைபேசி உரையாடல்களுக்கான பழக்க வழக்கங்களையே சொல்கிறது. வர்த்தக உரையாடல்கள் வேறு பட்டவை. நிச்சயம் உங்கள் நிறுவனம் அதற்கு பயிற்சி அளித்து இருக்கும்.

Phone Skills.jpg
நீங்கள் அழைப்பை எடுக்கும் போது
நீங்கள் அழைக்கும் போது எதிர் முனையில் இருப்பவர் பதில் அளிக்கவில்லை
பொதுவாக இந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் விடாமல் 5, 10 தடவைகள் missed calls எடுத்து விடுவீர்கள். பொதுவாக ஒரு Ringing என்பது 1 நிமிடம் வரை செல்லும். ஆனால் அவ்வளவு நீண்ட Ringing தேவை இல்லை. ஆக கூடுதலாக 30 seconds வரை பார்க்கலாம். எப்படியும் அழைக்கப்படும் நபர் அருகில் இருந்தால் 20 seconds உள் பதில் அளிப்பார். இல்லாவிட்டால் அவர் அருகில் இல்லை / வேறு வேலையில் உள்ளார் என அர்த்தம். தொடர்ந்து நீங்கள் Ringing செய்வது அவரை / அவருக்கு அருகில் இருப்பவரை எரிச்சல் படுத்தும்.
அருகில் இருப்பவர் பதில் அளித்தால்
நீங்கள் முக்கிய / அவசிய செய்தியை சொல்ல எடுத்து இருக்கலாம். அல்லது வீண் பேச்சு பேச கூட எடுத்து இருக்கலாம். ஆனால் அழைக்கப்பட்டவர் என்ன நிலையில் இருக்கிறார் என தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பயணித்து கொண்டு இருக்கலாம் / கைது செய்யப்பட்டு இருக்கலாம் / விபத்தில் சிக்கி இருக்கலாம். எனவே எப்போதும் "இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்? உங்களுடன் இப்போது கதைக்கலாமா?" இந்த கேள்விகளை கேட்டு விட்டு கதைக்க ஆரம்பிக்கவும்.

Teaching Telephone®
உங்களுக்கு அழைப்பு வரும் போது
பதில் அளிக்க கூடிய சூழ்நிலை
இதன்போது எதிர் முனையில் இருப்பவரின் மன நிலையை அறிந்து கதையுங்கள். உங்கள் நிலையையும் தெரியப்படுத்துங்கள். அவர் சொல்ல வந்த விடயத்துக்கான முன்னுரிமையில் நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

எப்போதும் Mobile Ring ஆக தொடங்கியதுமே பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். மணி ஒலித்தவுடன் பதில் அளிப்பது நாம் வெட்டியாக இருப்பது போன்றது என முட்டாள் தமிழ் திரைப்படங்கள் கொடூர கருத்தை பரப்பி வருகின்றன.

முதலில் இது பசங்க (2009) படத்தில் அறிமுகமானது அதன் பின் OK OK என பல படங்களில் தொடர்கிறது. Figure என்பதற்கு Oxford அகராதியை விஞ்சும் அளவிற்கு வரைவிலக்கணம் தரும் கேவலமான தமிழக இயக்குனர்களிடம் இருந்து நல்ல செய்தியை எதிர் பார்ப்பது எம் தவறு தான்.

உங்கள் நண்பர் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அழைப்பை எடுக்கிறார். நீங்கள் முதல் ring இல் பதில் அளித்தால் சரி. இல்லை என்றால் நேரம் செல்ல செல்ல அதாவது 20 - 40 seconds செல்ல செல்ல உங்களுக்கு அழைப்பை எடுத்தவர் உளவியல் ரீதியில் சோர்வடைவார். அதன் பின் நீங்கள் பதில் அளித்தாலும் சொல்ல வந்த விடயத்தின் 30% வரை தான் சொல்லுவார்.

எனவே முடிந்தவரை விரைவாக பதில் அளியுங்கள்.
பதில் அளிக்க முடியாத சூழ்நிலை
நீங்கள் முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது அது பற்றி அறியாத அழைக்கும் நபர், உங்களை தொடர்ந்து அழைத்த படி இருப்பார். இதன் போது அதை Reject செய்வது பாதகமான விடயம். அவர் சொல்ல வந்த விடயத்தின் மீது கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க தொடங்கி விடுவார். எனவே முடிந்தவரை Phone இனை Switch off செய்யுங்கள். ஒருபோதும் silent இல் விட வேண்டாம். முடிந்தால் ஒரு குறுந்தகவல் அனுப்பி விடுங்கள். அதில் இந்த நேரத்தின் பின் மீள அழைப்பேன் என சொல்வது இன்னும் சிறப்பானது.

ஆனால் நிச்சயம் உங்கள் கூட்டம் முடிந்ததும், அழைப்பு எடுத்தவருக்கு மீள அழையுங்கள். அது உங்கள் மீது அவர் கொண்டுள்ள நன்மதிப்பை பத்திரப்படுத்தும்.
தொழிநுட்ப விடயங்கள் தொடர்பாக
Loud Speaker
சில வேலை நீங்கள் அழைப்பை Loud Speaker இல் விட்டு கதைக்கலாம். எதிர் முனையில் இருப்பவர், அது பற்றி அறியாமல் சில இரகசியங்களை கதைக்கலாம். எனவே எப்போதும் Loudspeaker (Handfree set / out mic) இல் இருக்கும் போது எதிர் முனையில் இருப்பவருக்கு என் அழைப்பு loudspeaker இல் இருக்கிறது என சொல்லுங்கள்.
Call Record
முன்னைய காலங்களில் record செய்யப்பட்டால் ஒரு beep ஒலி எதிர் முனையில் இருப்பவருக்கு ஆவர்த்தன இடைவெளியில் செல்லும். இப்போது அப்படி இல்லை. பொதுவாக நிறுவனங்களை அழைக்கும் போது "சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக உங்கள் அழைப்புக்கள் ஒலிப்பதிவு செய்யப்படும் என்பதை கவனிக்கவும்" என்ற Greeting சொல்லப்படும். நீங்களும் இப்படி சொல்ல பழகுங்கள்.

நீங்கள் Record செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ஒரு செய்முறையில் உதாரணமாக ஒரு தொழிநுட்ப படிமுறைகள் தொடர்பாக நண்பர் தரும் விளக்கங்களை பதிவு செய்யலாம். வேறு சந்தர்ப்பங்களில் record செய்வது அநாகரிகமானது.
இவற்றை விட

பயணம் செய்து கொண்டு இருக்கும் போது கத்தி கதைக்காதீர்கள்.
குறுந்தகவலில் சொற்சிக்கனம் செய்யலாம். ஆனால் கருத்து சிக்கனம் செய்யாதீர்கள்.
Miss call கொடுத்து விளையாடாதீர்கள். புலி புலி என கத்திய கதை ஆகி விடும்.
Voice morpher மூலம் குரல் மாற்றி கதைக்காதீர்கள்
Customer care / promotional call களில் அசிங்கமாக கதைக்காதீர்கள்.

மொத்தத்தில் உங்களுக்கு என தொலைபேசியை கையாளும் நல்ல முறைகளை உருவாக்கி கொள்ளுங்கள்.

தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள் சம்பந்தமாக அண்மையில் பொறியியல் பீடத்தில் ஆங்கில விரிவுரையாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரமே இப்பதிவின் உள்ளடக்கம்.

Sunday, 2 March 2014

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம்

உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுக்க உள்ள தனது பயனாளிகளுக்கு இலவச இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்திருப்பதாக Mark Zuckerberg நேற்று பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்றும், இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..!

இந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..!

உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதிலிருந்து நீங்களே தடுக்கலாம். 

எல்லாமே நாம பயன்படுத்துற விதத்துலதாங்க இருக்கு..

உங்களுக்கு கம்பஃயூட்டர் பத்தி ஒன்னுமே தெரியாதுன்னாலும் பரவாயில்லை.. சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாம ஃபாலோ பண்ணினா உங்களோட கம்ப்யூட்டர் ரிப்பேரே ஆகாது. 

tips-for-computer-maintenance-with-cpu-cleaning

என்ன செய்யணும்? வாங்க பார்க்கலாம். 

CPU சுத்தம்: 

1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம். 

2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.

3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம் குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும். 

4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை...

தீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும். 

KeyBoard சுத்தம்: 

அடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம "தங்கம்பழனி" சார் "தொழில்நுட்பம்" தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க...

கீபோர்ட் தொழில்நுட்பம் (Key Board Technologies)

1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.

2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்... 

3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்... 

4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்.. 

தீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம "பளிச்"ன்னு மின்னும்.

Mouse சுத்தம்:

நாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.

இப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. "Air Bump" வச்சும் சுத்தப்படுத்தலாம். 

Screen சுத்தம்: 

அதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும். ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற "வெல்வெட்"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...

இதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்.

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்.
Igi rizvi
2:09 PM
Computer Tips Mobile Softwares Softwares Technology USB

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்.... கணினியில் USB Drive களை முடக்க வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்படும் என்பதனை பார்ப்போம். கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.

நம்முடைய கணினியில் உள்ள விவரங்களை நாம் கணினியில் இல்லாத நேரம் பிறர் சில நிமிடங்களில் USB காப்பி செய்து எடுத்து விடும் அபாயமும் உண்டு. இது போன்ற தருணங்களில் கணினியில் உள்ள USB Drive களை முடக்கி (Disable) செய்து வைக்க வேண்டிய கட்டாயம்

வரும்.கணினியின் BIOS Settings சென்று USB Port Disable செய்யலாம். ஆனால் அது நாம் USB Mouse, USB Keyboard, USB Printer போன்றவற்றை உபயோகித்தால் அவற்றையும் முடக்கி விடும்.USB Storage Device களை மட்டும் முடக்க வேண்டும். இதனை மூன்று வழிமுறைகளில் செய்யலாம்.

Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் regedit என்று கொடுத்து எனத் தட்டுங்கள். Start --> Run --> regedit . ரெஜிஸ்டரி எடிட்டர் தோன்றும். அதில் HKEY_LOCAL_MACHINE --> SYSTEM --> CurrentControlSet --> Services --> UsbStor செல்லுங்கள். வலது புறம் வரும் ஆப்சன்களில் "Start" என்பதனை டபுள் கிளிக் செய்யுங்கள்.தோன்றும் விண்டோவில் "Value Data" என்பதில்நீங்கள் USB Storage Drive களை Disable செய்ய விரும்பினால் "4" என்று கொடுக்கவும். USB Storage Drive களை Enable செய்ய விரும்பினால் "3" என்று கொடுக்கவும்.ரெஜிஸ்டரி எடிட்டரை மூடி விட்டு கணினியை Reboot செய்யவும்.

உங்கள் தேர்வின்படி USB Storage Drive enable/disable ஆகும்.இந்த முறை உங்களுக்கு கடினமானதாக தோன்றினால் ஒரு எளிய முறையை பார்ப்போம். கீழ்காணும் இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி கொள்ளுங்கள்.USB Storage Drive களை Enable செய்ய - EnableUSBDrive.regUSB Storage Drive களை Disable செய்ய -DisableUSBDrive.regஉங்கள் தேவைக்கான கோப்பை ஓபன் செய்தால் USB Enable / Disable ஆகும்.மற்றுமொரு வழிமுறையும் உண்டு.

ஒரு இலவச மென்பொருள் மூலம் இதனை செய்யலாம். இந்த மென்பொருளை இங்கே கிளிக் செய்து பெற்று உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.வேண்டுமென்ற ஆப்சனை தேர்வு செய்து உங்கள் தேவையை நிறைவேற்றி கொள்ளுங்கள். மேற்சொன்ன முறைகள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா , விண்டோஸ் 28, விண்டோஸ் 7 உள்ளிட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும்.